நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NTPC Green Energy Limited (NGEL) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் வருமானத்துடன் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் நிர்வாகி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 1, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் துறையில் BE/B.Tech முடித்தவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள துறையில் தகுதியான பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிகளில் Engineer (Civil – 40 இடங்கள்), Engineer (Electrical – 80), Engineer (Mechanical – 15), Engineer (IT – 4), Engineer (Material – 10), Executive (HR – 7), Executive (Finance – 26) உள்ளிட்டவை அடங்கும். பொதுவாக 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.

பொறியாளர் பணிகளுக்கு குறைந்தது 3 ஆண்டு அனுபவமும், HR பதவிக்கு 2 ஆண்டு அனுபவமும் அவசியம். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது சலுகை வழங்கப்படுகிறது. SC/ST பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.

விண்ணப்ப கட்டணம் ரூ.500 (SC/ST/மாற்றுத்திறனாளிகள் விலக்கு பெறுவர்). தேர்வு முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு சென்னையில் நடத்தப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ngel.in இணையதளத்தில் மே 1, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.