தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் டிசம்பர் வரை பருவமழை நீடிக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மழை பெய்யுமா பெய்யாதா என்பது பற்றி பார்ப்போம்.

அதாவது நாளை தீபாவளி பண்டிகையிலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை ஒரு சில மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது சென்னையில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.