2025-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை, அதாவது மார்ச் 29 சனிக்கிழமையன்று நிகழ இருக்கிறது. சனிக்கிழமை மற்றும் அமாவாசை ஒரே நாளில் வருவதால் இந்த கிரகணம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பூமி, நிலா மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது நிலா சூரியனை தற்காலிகமாக மறைக்கும் நிகழ்வே சூரிய கிரகணமாகும். இம்முறை நடைபெறும் கிரகணம், ஒரு பகுதி சூரிய கிரகணமாகும் என்றும், இந்தியாவில் இது காணப்படமாட்டாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூரிய கிரகணம் அதிகாலை 4.50 மணிக்கு துவங்கி, 6.47 மணிக்கு உச்சத்தை அடைந்து, காலை 8.43 மணிக்கு முடிவடைகிறது. கிரகணம் நடைபெறும் நேரம் இந்தியாவில் சூரியோதயத்திற்கு முன் என்பதால், மக்கள் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் இரண்டு சூரிய கிரகணங்கள் நடைபெற உள்ளன. முதல் கிரகணம் மார்ச் 29 அன்று; இரண்டாவது செப்டம்பர் 21ஆம் தேதி நிகழவுள்ளது. இரண்டாவதாக நிகழும் கிரகணம் “நெருப்பு வளையம்” போன்று தெரியும் வகையில் இருக்கும்.