தமிழகத்தில் இந்த மாதம் மட்டும் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.

அதன் பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இது போக வருகிற 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.

இதன் காரணமாக ரேஷன் கடைகளுக்கு மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் இதனை கணக்கில் கொண்டு முன்கூட்டியே பொருள்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.