இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அரசு மற்றும் அரசு சாரா என அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன்பிறகு ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது‌‌. அதன்படி ஆதார் அட்டையில் புகைப்படம், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாற்றிக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஏதேனும் ஒரு ஆவணத்துடன் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நாளுக்குள் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு https://myaadhaar.uidai.gov.in/என்ற ஆன்லைன் முகவரியிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தான் ஆதார் அட்டையை புதுப்பிக்க முடியும் என ஆதார் அணையம் அறிவித்துள்ளதால் அனைவரும் ஆதார் அட்டையை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.