நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக முதலீடு செய்தால் மெச்சூரிட்டி காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

இந்நிலையில் அவசர பணத் தேவை வரும்போது பலரும் நாடுவது வங்கி லோன்களைதான். ஆனால் இன்றைய வட்டிவிகிதம் தலையை சுற்ற வைக்கிறது. இதற்கு மாற்றாக PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியில் நீங்கள் கடன் பெறலாம். இதற்கு 8.1% வட்டி செலுத்த வேண்டும். தனிநபர் கடனை விட வட்டி குறைவாகும். உங்கள் PPF கணக்கில் இருக்கும் 25% தொகை மட்டுமே கடனாக எடுக்க முடியும். இதற்கு உங்கள் PF கணக்கு உள்ள வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.