கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுக்கையில் குச்சியை வைத்துக்கொண்டு விரட்டிக் கொண்டே ஓட வேண்டும். நிலத்திலிருந்து தண்ணீர் பீரிட்டு கிளம்ப எருமைகளின் கால் சத்தம் பேரொளியாக வெடிக்கும். இளைஞர்களின் முறுக்கு போன்று உடல் சீறிப்பாய பூமியை  தெறிக்கும்.

அப்படியே பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த கம்பால போட்டிகள் கடலோர கர்நாடகாவில் தான் பெரும்பாலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக தலைநகர் பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் நவம்பர் 25 26 என இரண்டு தேதியில் குறிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் 13 ஜோடி எருமைகள் பங்கேற்க உள்ளது.