ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. ராஜஸ்தானில் அன்றைய நாளில் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற இருப்பதாகவும், இதன் காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும், அரசியல் கட்சியில் சார்பில் இருந்தும் இது சார்பாக கோரிக்கைகள் ஊடகங்களில் அதிக அளவில் வெளியானது.

எனவே இந்த கோரிக்கைகளை எல்லாம் கருத்தில் கொண்டு அந்த கோரிக்கையையும் ஏற்று, அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் -6ஆம் தேதியாகும். வேட்புமனு பரிசீலனை நவம்பர் – 7 ஆம் தேதி தொடங்கும், வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, முன்னதாகவே அறிவிக்கப்பட்ட அதே டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.