மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் வருடம் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு   8000 கோடி ரூபாய்க்கு மேலாக இலவச மருத்துவ காப்பீடு மூலம் மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசால் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு போலவே மத்திய அரசின் இந்த  திட்டத்திலும் வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ சேவைகளை பெற முடியும். தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தோடு ஆயுஷ்மான் யோஜனா திட்டமும் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும், 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த சேவையை பெற முடியும். இந்த நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிப்பது மிக எளிமையானது தான். முதலில் healthid.ndhm.gov.in  என்ற மத்திய அரசின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு create ABHA number என்று இருக்கும். அதை பெறுவதற்கு உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசென்ஸ் ஆதாரமாக கொடுக்க வேண்டும்.

ஆதாரனை வைத்து உள்ளே நுழையும் பொழுது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு  ஓடிபி நம்பர் வரும். இந்த நம்பரை உள்ளிட வேண்டும். உள்ளே நுழைந்ததும் மருத்துவ காப்பீடு அட்டை தோன்றும். இப்போது உங்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் ஹெல்த் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.