இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கி இருப்பவர்கள் அல்லது அடுத்த கடன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் ஏழு முதல்  அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய மாற்றத்திற்கு பிறகு ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் வட்டி 8.65 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் 3 மாதங்களுக்கான வட்டி 8.85 % ஆகவும், ஆறு மாதங்களுக்கான வட்டி 9.10% ஆகவும் மாறியுள்ளது. அதேபோல, ஒரு வருட எம்சிஎல்ஆர் வட்டி 9.20 % ஆகவும், இரண்டு ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் 9.20 சதவீதமாகவும், மூன்று ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் 9.25 சதவீதமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.