மத்திய மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய நலனுக்காக பணியாளர் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் முதல்வர்  தற்போது பெண் குழந்தைகளுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அதாவது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலர் ரேஷன் கார்டு கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களுக்கு 5000 ரூபாய் செலுத்தப்படும். அதன் பிறகு முதல் வகுப்பில் சேரும்பொழுது 6000, ஏழாம் வகுப்பில் சேரும்பொழுது 7000, 12ஆம் வகுப்பில் சேரும்பொழுது 8000 இதன் பிறகு ஒருமுறை 75 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பெண் குழந்தைகள் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்  பெறுவார்கள். இந்த தொகையானது அவர்களுடைய 18 வயதில் வழங்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக அந் மாநிலத்தில் பெண் குழந்தைகளின்  விகிதத்தை அதிகரிப்பது , அவர்களுடைய கல்வியை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.