தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நாடு முழுவதும் பல கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது.  இதன் மூலமாக வாகன ஓட்டிகளின் பயண நேரம் மிக கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயணிகள் மற்றும் சுங்கச்சாவடி ஆபரேட்டர்களின் பாதுகாப்பிற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறயை  வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த வழிமுறைகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி ஆபரேட்டர்களில் சிரமங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சுங்கச்சாவடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களையும் பயணிகளையும் திறமையாக நிர்பந்திப்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பிரதி அலுவலர்கள் உறுதி செய்ய  வேண்டும். சுங்கவரி வசூல் முகவர் தங்களுடைய பொறுப்புகளை சரியாக செய்வதை வட்டார அலுவலகங்கள் கண்காணிக்க வேண்டும். தங்களுடைய பெயருடன் இணைந்து NHAI சீருடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வன்முறை சம்பவங்களின் போது சுங்கச்சாவடி ஆபரேட்டர்கள் மட்டுமே அதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

பயணிகள் தவறாக நடந்து கொண்டால் லைன் மேற்பார்வையாளர்கள் தலையிட்டு பிரச்சனையை சமூகமாக தீர்த்து வைக்க வேண்டும். சுங்கச்சாவடி ஆபரேட்டர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு கோப மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.