இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு மருத்துவ காலி பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் மருத்துவமனை பற்றாக்குறைய காரணம் காட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மருத்துவர்கள் ஓய்வு  வயதை 62 இலிருந்து 65 ஆக  உயர்த்தலாம்  என்று பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 62 இலிருந்து 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மருத்துவர்கள் 65 வயதுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற விரும்பினால் அதற்கும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .அது மட்டும் இன்றி மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 65 ஆக உயர்த்தியது மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.