சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.