திருவாரூர் மாவட்டம் ஏ டி பன்னீர்செல்வம் நகரை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(80). இவர் தபால் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம அவர்கள் உங்களது முகவரிக்கு சட்ட விரோதமான முறையில் கடத்தல் பொருள் பார்சல் வந்துள்ளது.

உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த குஞ்சிதபாதம் அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குஞ்சிதபாதம் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்