
வாட்ஸ்அப் குழுக்களில் தற்போது SBI, ICICI, AXIS, HDFC, CUB போன்ற வங்கிகளின் பெயர்களில் “உங்கள் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என கூறும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அதிகமாக பரவி வருகின்றன.
இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. தியாகராஜன் எச்சரித்ததாவது, “இவை அனைத்தும் இணைய வழி குற்றவாளிகள் பொதுமக்களின் பணத்தை திருடுவதற்காக உருவாக்கிய திட்டமிடப்பட்ட மோசடி முயற்சிகளாகும்.
இந்த போலி லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டு, வாட்ஸ்அப் மற்றும் வங்கி கணக்குகள் கைப்பற்றப்படும்,” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பண பரிவர்த்தனை சம்பந்தமாக சந்தேகம் இருப்பின், நேரடியாக சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உறுதி செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மோசடியை எதிர்கொள்ள 1930, 0413-2276144, 94892 05246 ஆகிய எண்களில் சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். “தங்களுடைய வங்கி கணக்கு, ஆவணங்கள், சிம் கார்டுகளை யாரிடமும் பகிர வேண்டாம்.
பணம் அனுப்பி கமிஷன் தருவதாகக் கூறுபவர்கள் தவறான நபர்களாக இருக்கக்கூடும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் மிகவும் அதிகரித்துள்ளது.