
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டரிக்கும். மேலும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.