
சென்னையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தற்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை கண்காணிப்பதற்காகவும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கண்காணிப்பதற்காகவும் ஏஐ வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
அதன்பிறகு இதுவரை விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றத்திற்காக தவறு இழைத்தவர்களிடமிருந்து 18 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏஐ கேமராக்கள் ஒருவரின் முகத்தை வைத்து அவர்களுடைய ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை அனுப்பி விடுமாம். மேலும் இதன் காரணமாக பொது இடங்களில் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொது இடங்களில் குப்பை கொட்டும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.