தென்மேற்கு பருவமழை தமிழக மற்றும் புதுச்சேரியில் குறைந்த நிலையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக வருகிற 28ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தற்போது அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் வருகிற நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போது 2 புயல்கள் உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல்கள் நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான கால இடைவெளிக்குள் உருவாகும் என்று கணித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் காரணமாக தமிழகத்தில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.