இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் e-KYC புதுப்பிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களிடம் தங்களது ஆவணங்களை பகிர வேண்டாம் என்றும் பயனரின் பெயர், பாஸ்வேர்டு, ஏடிஎம் கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை எந்த சூழலிலும் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் மோசடி நடைபெற்றால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.