
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை, தற்போது பல்வேறு முக்கியமான சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் பள்ளி சேர்க்கை முதல் மருத்துவ சிகிச்சை வரை ஆதார் அவசியமாகிறது. ஆதார் கார்டில் உள்ள நபரின் பெயர், புகைப்படம், கைரேகை, கண் ரேகை போன்ற விவரங்கள் நமக்கு மட்டுமே சொந்தமானவை என்பதால், அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தவறான முறையில் உங்கள் ஆதார் பயன்படுத்தப்படுகிறதா? தொழில்நுட்ப முன்னேற்றத்தில், இந்த முக்கியமான விவரங்களை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உங்கள் ஆதார் விவரங்களை வேறு யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதை UIDAI வழங்கும் “Authentication History” என்ற வசதியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
செய்முறை:
1. https://myaadhaar.uidai.gov.in/login என்ற இணையதளத்தில் சென்று ஆதார் எண், கேப்ட்சா உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து லாகின் செய்ய வேண்டும்.
2. பிறகு “Authentication History” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. அங்கு நீங்கள் தேவைப்படும் கால அளவைக் குறிப்பிடலாம்.
4. அதன் பின்னர், உங்கள் ஆதார் எப்போது எங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முழுமையான விவரங்கள் வெளியாகும்.
இந்த விவரங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்படினால், உடனடியாக UIDAI-யை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
தொடர்பு எண்: 1947
மின்னஞ்சல்: [email protected]
இதன் மூலம் உங்கள் ஆதார் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சுலபமாக சரிபார்க்கலாம்.