இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தற்போது சமையல்கேஸ்  சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமும் கேஸ் இணைப்பை வழங்கி வருகிறது. கேஸ் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு சிலிண்டர் பயன்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஒன்று, இரண்டு என்ற பிரிவுகளின் அடிப்படையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான வீடுகளில் இரண்டு இணைப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டு சிலிண்டர் இணைப்பு வழங்க கேஸ் ஏஜென்சிகள் மறுப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்தது. ஒரு சிலிண்டர் மட்டுமே கொடுக்க வேண்டும். இரண்டு சிலிண்டர் இணைப்பு வேண்டும் என்றால் தனியார் ஏஜென்சிகளை அணுக வேண்டும் என்று சொன்னதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதாவது இரண்டு கேஸ் இணைப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் அனைத்து கேஸ் ஏஜென்சிகளின் வாடிக்கையாளர் புகார் மற்றும் கருத்து தொடர்பான பதிவேடு இருக்கிறது, அங்கு இந்தியன் ஆயில் அதிகாரிகள் தொடர்பான விவரங்களும் உள்ளது. அதோடு வாடிக்கையாளர்கள்  1800 2333 555  என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தங்களுடைய புகார் தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.