2023 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் ஜூலை 3 ஆம் தேதி இன்று தோன்றுகிறது.  பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை நிலவு வரும்போது சூப்பர் நிலவு தோன்றும். இது வழக்கத்தை விட 17% அளவில் பெரிதாகவும். 30% ஒளி அதிகமாகவும் இருக்கும். இந்த பெரிய நிலவிற்கு ‘பக் சூப்பர் மூன்’ அல்லது தண்டர் மூன்/ஹே/மெட் மூன் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த சூப்பர் மூன் இன்று மாலை 5.09 மணி முதல் வானில் தெரியும் என்றும், இரவு நேரத்தில் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு வானில் தோன்றும் சூப்பர் மூன் வழக்கமான முழு நிலவை விட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.