தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் நேற்று கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.