நாளை ரம்ஜான், அதன் பின் சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடர்ந்து வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் 1,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், கடைசி நேர சிக்கலை தீர்க்க உடனே www.tnstc.in என்ற இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம்.