
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் 3 முறை மின்கட்டண உயர்வு, இரு மடங்கு வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வு, பலமுறை பால் பொருட்கள் உயர்வு, உணவுப் பொருட்களின் விலை பன் மடங்கு உயர்வு என பல்வேறு வகைகளில் மக்களை துன்புறுத்தி வருகிறது.
இந்த விலையை எல்லாம் உயர்த்தியது மட்டும் இன்றி தற்போது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முயற்சிக்கும் போது அதற்கான வரைபட அனுமதி கட்டிடங்களை வானளவில் உயர்த்தியுள்ளது. இதில் வரைபட அனுமதி கட்டணத்தை இணையவழி மூலமாக சுலபமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு தற்போது அதற்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளனர். மேலும் இதன் மூலம் தமிழக மக்களின் சொந்த வீடு கனவை நீர்த்துப்போக செய்த இந்த அரசுக்கு என்னுடைய கண்டனங்கள் என்று கூறியுள்ளார்.