2024 மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தீவிரம் கட்டி வருகின்றது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையத்தை இணைக்கவும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.