மகளை கொன்று விட்டு சடலத்தை பைக்கின் பின்புறம் கட்டி ரோட்டில் இழுத்துச் சென்று தந்தை ரயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தந்தை இத்தகைய கொடூர குற்றத்தை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகள் வீட்டை விட்டு வெளியேறி திரும்பி வந்த போது தந்தை கூறிய ஆயுதத்தால் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமுறைவாக உள்ள நிலையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது