மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ,பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கான வேலை வாய்ப்பு, சமூக முன்னேற்றம், பொருளாதாரத்தை வளர்ச்சி போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வரும் நிலையில்  மக்களுக்கு கல்வி கொடு திட்டமும் ஒன்று. பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம் (மக்களுக்கு கல்வி கொடு திட்டம்) கடந்த 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் ஹரியானாவில் பிரதமரால் தொடங்கப்பட்டது. பெண் பாலின விகிதத்தில் சரிவைத் தடுத்து பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டத்தின் நோக்கமாகும்.