தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை இந்த மாதமும் தடையின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், திட்டங்கள் தொடரும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், வரும் மே 15-ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் கூடுதல் தொகையாக 2,500 ரூபாய் வரவு வைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
