குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.53 லட்சம் பேருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்குவது ஏன் என அமைச்சர் KN.நேருவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தமிழகத்தின் நிதி வருவாய் அதிகரிக்கும்போது அனைத்து மகளிருக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என பதிலளித்துள்ளார்.