தமிழகத்தில் மகளிர் உரிமைக்காக திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களாக ஒரு கோடியே 6 லட்சம் மகளை தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு கைபேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

மகளிர்க்கு வழங்கப்படும் தொகையானது 15 ஆம் தேதி 1000 வரவு வைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனர்களுக்கு இம்மாதம் ஒரு நாள் முன்னதாகவே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவும் வைக்கப்பட உள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ஆம் தேதி வங்கி கணக்கில் பணத்தை செலுத்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.