மகரம் ராசி அன்பர்களே,

இன்று எந்த முடிவையும் தெளிவாக எடுங்கள். இல்லத்தாரிடம் கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. பண வரவு திருப்தியை கொடுக்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பூமி விற்பனையால் லாபம் ஏற்படும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நிகழும்.

தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. சமாளித்து வெற்றி பெற முடியும். பெண்கள் காரியங்களை சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள்.

விளையாட்டில் முழு அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். படிப்பில் அக்கறை தேவை. பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்