கும்பம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சான்றோரின் சந்திப்பு கிட்டி மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துக்கு தேவையான பொருள் சேர்க்கை இருக்கும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான சூழல் மாறிவிடும். உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். சிறிதளவு மருத்துவ செலவுக்கு பின்னர் முன்னேற்றம் ஏற்படும்.

செலவுகளை கட்டுப்படுத்துவதால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இன்று பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். வெற்றி வாகை சூட முடியும். எதார்த்தமாக செயல்பட முடியும். கல்வியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1, 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்