சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று, பல மாதங்கள் கழித்து வீடு திரும்பிய மகனுக்கும் அவனது தாய்க்கும் இடையிலான உன்னதமான அன்பை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர் ஒருவர், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அப்போது, கதவிற்குப் பின்னால் மறைந்திருந்த அவரது தாய், ‘பார்ட்டி பாப்பர்’ வெடித்து மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். எதிர்பாராத இந்த வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போன அந்த இளைஞன், தனது தாயைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்ப்பவர்களின் கண்களையும் கசியச் செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sri Sai Swetha Chennupati (@swetharahul003)

“>

இன்ஸ்டாகிராம் பயனர் என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சுமார் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவில், பின்னால் நின்றிருந்த தந்தையும் தன் மகனைக் கண்டு உணர்ச்சிவசப்படுவதைக் காண முடிகிறது.

இந்நிலையில் “தாயின் அன்பை விட சிறந்தது எதுவுமில்லை” என்றும், “தந்தை ஒரு குடும்பத்தின் அச்சாணி” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு நெகிழ்ச்சியுடன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வைரல் காட்சி, உறவுகளுக்கு இடையே உள்ள தூய அன்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.