
ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன் டிராபிக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார்.
அதோடு டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற தோனியின் சாதனை சமன் செய்தார். இந்நிலையில் ரிஷப் பண்டின் சகோதரி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டோராடூன் சென்ற தோனி விமான நிலையத்தில் வைத்து சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள் சாம்பியன்ஸ் டிராபி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்க மறுத்த தோனி போ போ… என்ற வகையில் கையசைத்து விட்டு சென்றார். இதன் காரணமாக ரசிகர்கள் தோனியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.