அஞ்சல் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகள் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என தனித்தனியாக அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதன் மூலமாக அதிக லாபமும் கிடைக்கிறது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். போஸ்ட் ஆபீசில் கணக்கு தொடங்க குறைந்தபட்சம் 18 வயதுடைய நபராக இருத்தல் வேண்டும். மைனராக இருந்தால் 10 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று பேர் இணைந்து கூட்டு கணக்கு தொடங்கலாம். தற்போது சேமிப்பு கணக்கிற்கு 4% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். இதை அஞ்சலகத்தில் சமர்ப்பித்தால் எளிய முறையில் சேமிப்பு கணக்கு  தொடங்கப்படும்.