இந்தியாவில் பல முன்னணி வங்கிகளுடன் இணைந்து தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் RD என்ற திட்டம் மிகவும் பிரபலமாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்த திட்டத்திற்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டில் தொடர் வைப்பு தொகைக்கான  வட்டி விகிதத்தை 6.2 ஏட்டியது இதனால் பலர் இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டில் வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை இந்த திட்டங்களில் டெபாசிட் செய்யப்படுகிறது.

அதாவது 10 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4000 ரூபாய் வைப்பு தொகையாக தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ப்ளெக்ஸ் தொடர் வட்டியில் வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப மாதாந்திர வைப்பு தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கவும் செய்யலாம். இந்த திட்டத்தில் முன்னதாக தொகையை டெபாசிட் செய்ய வேண்டிய தேவையில்லாமல் இருந்த நிலையில் அதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையில் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம் எனவும் முதிர்வு காலத்தில் வட்டியுடன் பணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.