தெலுங்கானா மாநிலத்தில் அனில் (28)-சைலஜா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினர். அதன்பின் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கோத்தகிரி காவல்துறை ஆய்வாளர் சந்தீப் என்பவருக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளனர். அதில் சைலஜா தான் ஒரு சிறிய தவறு செய்து விட்டதாகவும் அதனை கணவர் மன்னித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் கணவரின் குடும்பத்தினர் தேவையில்லாமல் பொய் குற்றசாட்டுகளை பரப்பி எங்களை துன்புறுத்தி வருகிறார்கள். இதனால் நாங்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று கூறியிருந்தார். அதன்பின் சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் சென்ற நிலையில் அவர்களை காணவில்லை. அதன் பின் அவர்களுடைய செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் தேடிய போது ரயில் தண்டவாளத்தில் கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இருவரும் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.