உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 76 பகுதி உள்ளது. இங்கு ஒரு உயரமான செல்போன் டவர் இருக்கிறது. இதன் மீது நேற்று மதியம் போதை ஆசாமி ஒருவர் திடீரென ஏறி நடனமாட ஆரம்பித்தார். அவர் நடனம் ஆடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு மக்கள் கூட்டம் கூடியது. சிலர் அதனை வேடிக்கை பார்த்த நிலையில் பலர் அதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் அவரிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் அந்த நபர் கீழே இறங்கி வர மறுத்து தொடர்ந்து நடனம் ஆடினார். பின்னர் இறுதியாக அவர் கீழே இறங்கினார். அவர் சற்று மனநல பாதிக்கப்பட்டவராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.