கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சரவணன் – செல்வி தம்பதி இந்த தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து ரூ.16,80,900 கடனாக பெற்றுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு வங்கியில் உள்ள நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது சரவணன் – செல்வி தம்பதி வைத்த நகை போலியானது என்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து நிதி நிறுவனத்தின் மேலாளர் கௌதமன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், கார் மற்றும் மூன்று போலி தங்க நாணயம் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தலைமுறைவாக உள்ள செல்வியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதோடு இந்த தம்பதியை நிதி நிறுவனத்தில் அறிமுகப்படுத்தி வைத்த மணி மற்றும் சந்திரசேகரன் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.