போலிச்செய்திகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என உலக பொருளாதார  மன்றம் எச்சரித்துள்ளது. World Economic Forum கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஆய்வு நடத்தி, 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்க உள்ள 34 ஆபத்துகளை பட்டியலிட்டது. அதில், போலிச்செய்திகள் எந்த நாட்டிற்கு அதிக ஆபத்தை உருவாக்கும் எனும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.