மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) விடுத்துள்ள ஒரு அதிரடி அறிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
“ஈரான் நாட்டின் எல்லைக்குள் இன்று நடத்தப்படவுள்ள தாக்குதல்கள், இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும்” என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
🚨 BIG STATEMENT
“Today will be yet again our most intense day of STRIKES inside Iran,” says US Defence Secretary Pete Hegseth 🤯pic.twitter.com/rm2LzHogmm
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 10, 2026
ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இன்றைய தினம் நடத்தப்படப்போகும் தாக்குதல் ஈரானுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பதை ஹெக்செத்தின் இந்த ‘பிக் ஸ்டேட்மெண்ட்’ உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தப் பிடிவாதமான போக்கினால், ஈரானின் பதிலடி இன்னும் வீரியமாக இருக்கும் எனக் கருதப்படுவதால், வளைகுடா பிராந்தியமே ஒரு எரிமலைக்கு மேல் இருப்பது போன்ற பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது.
