காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட  நாடு முழுவதும் 244 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம் மற்றும் சென்னை கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் போர் ஒத்திகை பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது பாகிஸ்தானால் சென்னையை தாக்க முடியுமா என்ற ஒரு சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அதைப்பற்றி பார்ப்போம். அதாவது பாகிஸ்தானில் பலவகையான அணு ஆயுதங்கள் மற்றும் துரித வகை தாக்குதல் ஆயுதங்கள் இருக்கிறது.

குறிப்பாக 1500 முதல் 2200 km வரை இலக்குகளை குறிவைக்கக்கூடிய சாகின் 2 மற்றும் அப்பிள் போன்ற ஏவுகணைகள் உள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து சென்னை 1800 km தூரத்தில் இருக்கிறது. இதனால் தொழில்நுட்ப ரீதியாக சென்னையை தாக்கும் வாய்ப்புள்ளதாக யூகிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நேரத்தில் இந்திய ராணுவத்தினர் மிகவும் வலிமையாக இருப்பதால் கண்டிப்பாக பாகிஸ்தான் செய்தாலும் அதற்கு இரு மடங்காக அப்படியே திருப்பிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.