மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள நாக்ரத் சௌக் பகுதியில், கடந்த புதன்கிழமை மதியம் இரு குதிரைகள் வழிதவறி சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை இழந்த அந்த குதிரைகள் சண்டையிட்டபடி சாலையில் ஓடிச்சென்று, அருகிலுள்ள ஒரு வியாபாரக் கடைக்குள் நுழைந்தன. இதனால் அங்கு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் விரட்ட முயன்றபோது ஒரு குதிரை கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக ஒரு ஆட்டோ மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு வழிப்போக்கர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமடைந்ததால், கடை உரிமையாளருக்கு நிதிநஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கோபத்துடன் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களாக அந்த பகுதிகளில் இக்குதிரைகள் சண்டையிட்டு திரிகின்றன என்றும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
मध्य प्रदेश के जबलपुर में एक विचित्र घटना हुई।
नागरथ चौक पर दो घोड़े आपस में लड़ने लगे। दोनों दौड़ते हुए आ रहे थे।
लोगों का कहना है कि सैयारा फ़िल्म देखने के बाद दोनों एक घोड़ी के लिए लड़ पड़े।
लड़ते-लड़ते एक घोड़ा, गुस्से में ऑटो में बैठ कर भागने की कोशिश करने लगा। वीलन के… pic.twitter.com/YiyrBI30I7
— काश/if Kakvi (@KashifKakvi) July 26, 2025
“>
இனி இது போன்ற அலட்சியம் தொடர்ந்து நடந்தால், பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என வணிகர்கள் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளனர். “இந்த மோதலில் ஒரு சின்ன பையனோ, வயதான நபரோ இருந்திருந்தால், அது உயிரிழப்பாக முடிந்திருக்கலாம்” என வேதனையுடன் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தி, சேதமடைந்த ஆட்டோவை அகற்றி போக்குவரத்தை மீட்டுள்ளனர். இக்குதிரைகளின் உரிமையாளரை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.
