அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் கட்சி செயல்பாடுகள் குறித்து கவனிக்க கள ஆய்வு குழு ஒன்றினை நியமித்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருநெல்வேலியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதாவது கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன் மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தலைமையிலான குழுவினர் திடீரென மோதலில் ஈடுபட்டதோடு கைகலப்பில் நிலவியது.

இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் கேமராக்களை பிடுங்கி மோதிக்கொண்டனர். அவர்களை எஸ் பி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தடுப்பதற்கு முயற்சி செய்தனர். இதேபோன்று திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தின் போது நிர்வாகிகள் திடீரென தகராறு செய்தனர். அதாவது திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்த போது நிர்வாகிகள் அவரை நிறுத்தி தகராறு செய்த நிலையில் இருந்தவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை திண்டுக்கல் சீனிவாசன் சமாதானம் செய்து வைத்தார். மேலும் அடுத்தடுத்து நெல்லை மற்றும் கும்பகோணத்தில் கலா ஆய்வுக் கூட்டத்தின் போது கட்சியில் நிர்வாகிகள் மோதிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.