
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதச் செயலியில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில இருந்த ஒருவரிடம் பயங்கரவாதிகள், “போய் மோடியிடம் இதைச் சொல்லு,” என கூயுள்ளனர். இந்த துயரமான சம்பவத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
அடுத்த கட்டமாக, இன்று அதிகாலை இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உள்ள 9 முக்கிய பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒருங்கிணைந்த முறையில் இந்த தாக்குதலை மேற்கொண்டன. முக்கியமாக, இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவ வளாகங்கள், பொதுமக்கள் குடியிருப்புகள் போன்றவை குறி வைக்கப்படாமல், தவிர்க்கப்பட்டன.
பயங்கரவாத முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன என்பது ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் ராணுவ பதிலடி உலக நாடுகளிடையே பாராட்டைப் பெற்றதுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் உறுதியையும் காட்டுகிறது.