ஹரியானா – ராஜஸ்தான் எல்லைப் பகுதியில், லஞ்சம் வாங்கிய போலீஸ் காவலர் ஒருவர் அதை வீடியோ எடுத்த கார் ஓட்டுநரைத் தாக்கி அவரது மொபைல் போனைப் பறிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு போலீஸ் காவலர் ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த ஓட்டுநர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். தான் லஞ்சம் வாங்கியது மாட்டிவிட்டதை உணர்ந்த அந்த காவலர், ஆத்திரமடைந்து ஓட்டுநரை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்து போனை வலுக்கட்டாயமாகப் பறிக்க முயன்றுள்ளார்.

ஓட்டுநர் தனது போனைத் தராமல் தடுத்ததால், ஆத்திரமடைந்த காவலர் அவரை இரக்கமில்லாமல் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் மற்றும் வாக்குவாதக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது பரவி வருகிறது.

காவல்துறையினரின் இந்த அத்துமீறல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

“>

தற்பொழுது பாதிக்கப்பட்ட ஓட்டுநர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.