உத்தர பிரதேஷ் மாநில பகுதியை சேர்ந்த நெக்ஸூ என்பவர் தனது சகோதரனான சத்தியபன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சகோதரர்கள் இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி சத்யபன் கோடாரி ஒன்றால் தனது சகோதரன் நெக்ஸூவை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டார்.

பின்னர் குடிபோதையில் இருந்து தெளிந்த சத்தியபன் சகோதரன் கொலை செய்யப்பட்டு கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது வீட்டிற்கு முன்பு இருந்த குழி ஒன்றில் சடலத்தை மறைத்து விட்டார். நெக்ஸூ வெகு நேரம் ஆகியும் திரும்புததால் அவரது மனைவி பல இடங்களில் தேடிவிட்டு சத்யபனிடம் கேட்க சகோதரன் வெளியில் சென்று விட்டதாக பொய் கூறியுள்ளார்.

பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சத்யபன் தனது இரண்டாவது சகோதரனான புரான் என்பவரிடம் குடிபோதையில் என்னிடம் பிரச்சனை செய்தால் நெக்ஸூவை மாதிரி உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைய சகோதரன் குடும்பத்தினரிடம் கூறி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சத்யபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.