நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூலை 14ஆம் தேதி நுழைவு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள், வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது, SSC, ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி மேற்கொள்ள முடியும்.